இலங்கையில் தொடரும் பதற்றம்! வீட்டைவிட்டு வெளியேறிய ராஜபக்சே: வெளிநாடு தப்புகிறாரா?
இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி உள்ளது.
இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பு விமான நிலையத்திலும் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.
இன்று அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை: வாங்குவதற்கு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க
இந்த நிலையில் கொழும்பு அரசு மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ராணுவம் அவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து மாளிகையிலிருந்து ராஜபக்சே வெளியேறினார்.
இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.