இனியாவை தூரத்திலிருந்து பார்த்து ரசிக்கும் பாக்கியா! தாத்தாவின் மூலம் புதிய டுவிஸ்ட்டை களமிறக்கும் இயக்குநர்..
பாக்கியலட்சுமி சீரியலில் இருக்கும் பாக்கியா மற்றும் இனியா இருவரும் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை பிடிக்கிறது.
இதில் நடிக்கும் கோபி மற்றும் பாக்கியா கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளனர்.
இந்த சீரியல் அரம்பத்தில் பெரியளவில் ரீச்சாகவில்லையென்றாலும் தற்போது கோபியின் இரண்டாவது திருமணத்திலிருந்து அதிகம் பேசப்படுகிறது.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் தற்போது கோபி தற்போது ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு பாக்கியாவின் வீட்டிற்கு முன்னால் இருக்கும் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இவர்களுடன் இனியாவும் தாத்தாவும் சென்று வசித்து வருகிறார்கள். இது இப்படி இருக்கையில் பாக்கியா, ராதிகாவை தேர்தலில் வெற்றிப் பெற்று அந்த காளனி ஜெர்மனாக மாறியுள்ளார்.
இதனால் பாக்கியாவிற்கு சமையல் காண்ட்ராக்ட் பணி கிடைக்காமல் ஆக்கியுள்ளார் ராதிகா. இந்த பிரச்சினைகளால் இனியா முறையா படிக்காமல் இருந்ததால் தற்போது பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இனியா படிக்காமல் இருந்ததற்கு இது தான் காரணமா?
இவர் இவ்வாறு குறைவான புள்ளிகள் பெறுவதற்கு குடும்ப பிரச்சினைகள் தான் காரணம் என பாக்கியா நினைத்துக் கொண்டதுடன் இனியாவிற்கு அறிவுரைகளை கூறி கடிதடிமொன்றை வழங்கியுள்ளார்.
இந்த கடிதத்தை வாசித்த இனியாவின் படிப்பின் அறுமையை தெரிந்துக் கொண்டு தற்போது மேலதிக வகுப்பிற்கு செல்ல தயாராகி கோபியின் வீட்டை விட்டு வெளியே வருகிறார்.
இதன்போது பாக்கியாவும் இனியாவை பார்ப்பதற்காக அவரின் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறார். இனியாவை பார்த்ததும் பாக்கியாவும் ஆனந்தம் கொள்கிறார்.
தனது அம்மாவின் முகத்தை பார்த்து இனியாவும் புன்னகைத்து விட்டு தாத்தாவை பார்த்து நான் மேலதிக வகுப்பிற்கு செல்கிறேன் கூறுங்கள் என கூறியுள்ளார். தாத்தாவும் பாக்கியாவிடம் சத்தமாக “நாங்கள் மேலதிக வகுப்பிற்கு செல்கிறோம்” என கத்திக் கொண்டே செல்கிறார்.
இந்த வீடியோக்காட்சியை பார்த்த நெட்டிசன்கள் “கோபி என்ன தான் கூறினாலும் மீண்டும் இனியா பாக்கியாவிடம் சென்றுவிடுவார்“ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.