கெத்து காட்டிய கோபியின் மூக்கை உடைத்த பாக்கியா! பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியுடன் போட்ட சவாலில் பாக்கியா முதல் படி எடுத்துவைத்திருக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதிலும் தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டதை அவதானித்த ரசிகர்கள் மேலும் கடுப்பில் இருந்து வருகின்றனர்.
கோபியின் மூக்கை உடைத்த ராதிகா
இந்நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்படும் கோபியின் நிலை தற்போது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கோபி அங்கு சுதந்திரமாகவும் இருக்கமுடியாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் பாக்கியா தனது முதல் ஆர்டரில் தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதில் கோபிக்கு முதல் தவணையாக ரூ.40 ஆயிரத்தினை செலுத்தி மூக்கை உடைத்துள்ளார். இந்த ப்ரொமோ காட்சி வைரலாகி வருகின்றது.