இது ஒரு அசிங்கபுடுச்ச கல்யாணம்.. ராதிகாவின் அண்ணனை வெளுத்து வாங்கிய பாட்டி; ஷாக்கில் குடும்பத்தினர்..!
“இது ஒரு அசிங்கம் புடுச்ச கல்யாணம்..” என ராதிகாவின் அண்ணனை கோபியின் அம்மா வெளுத்து வாங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் ராதிகா, கோபி, பாக்கியா என பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
கோபியின் இரண்டாவது திருமணம் பாட்டிக்கு பிடிக்கவில்லை என்பதால் அவரால் எந்த விடயத்தையும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.
மேலும் ராதிகாவும் அசராமல் பாட்டியின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார்.
வெளுத்து வாங்கிய பாட்டி..
இப்படியொரு நிலையில, பாக்கியாவை வீட்டில் வைத்திருப்பது ராதிகாவிற்கு பிடிக்கவில்லை.
அவரை வெளியில் துரத்தி விட்டு ராதிகா மருமகளாக வாழ்வதற்கு புதிய திட்டங்களை போட்டு வருகிறார்.
அந்த வகையில், ராதிகாவின் அண்ணன், அண்ணி இருவரும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார்கள்.
அப்போது பாட்டி ராதிகாவின் அண்ணனை வெளுத்து வாங்கியுள்ளார்.