Gold Price : தொடர்ந்து சரியும் தங்க விலை: இன்று சவரன் எவ்வளவு?
இன்றைய ஆகஸ்ட் 28ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. விலை விபரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறையும் போக்கு காணப்படுகிறது.குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ஆனால், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. இதன் காரணமாக தங்கம் வாங்க காத்திருப்பவர்களிடையே விலை நிலவரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை சரிந்தது. மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,725 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.12,420 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.99,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |