Gold Rate Today: ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி - தங்கம் விலை மீண்டும் ஏற்றம்
today gold-and silver-price : இன்றைய (ஆகஸ்ட் 3) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த ஜூலை மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலையில் கணிசமான சரிவு பதிவாகி, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியது.

அதன்படி, நேற்று முன்தினம் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்

ஆனால், இன்று (ஆகஸ்ட் 3) தங்கம் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.13,250 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்வை கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,065 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.88,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |