ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்க விலை! இன்று சவரன் எவ்வளவு?
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், இன்றைய சந்தை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒருநாள் உயர்வதும் மறுநாள் குறைவதுமாக நிலையற்ற போக்கில் காணப்பட்டு வருகிறது.

நேற்று (ஆகஸ்ட் 28) ஒரே நாளில் தங்கம் விலை காலை மற்றும் மாலை வேளைகளில் வெவ்வேறு நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650க்கும், ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தங்கம் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,800க்கும், சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,18,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிவலரம்

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை விலையுடன் ஒப்பிடுகையில், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்துள்ளது.
இதனால் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,505க்கும், ஒரு சவரன் ரூ.1,14,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 அளவுக்கு குறைந்துள்ளது.
18 காரட் தங்கத்தின் விலையும் சரிவு 22 காரட் தங்கத்தைப் போலவே 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,275க்கும், ஒரு சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.98,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,60,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |