எனக்கு என் அம்மா தான் குழந்தை..! குறையை அப்பட்டமாக போட்டுடைத்த பிரபலம்..கண்கலங்க வைத்த நொடிகள்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சின்னத்திரை நடிகை ரக்ஷிதா தனக்கு குழந்தையில்லை என போட்டியாளர்கள் முன்னிலையில் அழுது புலம்பியுள்ளார்.
பிக் பாஸ் பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டில்இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அதிகமான ரசிகர்களை தன்வசப்படுத்தி விளையாடிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.
இவர் சிக்கத்திரை பிரபலங்களில் ஒருவரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் முடிந்து நீண்ட நாட்களாகியும் இவர்களுக்கு குழந்தையில்லாதது பெரிய குறையாக காணப்பட்டது.
சேவ் கேம் போட்டியாளர்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் போது பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்று பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில முக்கிய போட்டியாளராக இருக்கும் ரக்ஷிதா தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாமல் பல முறை டாஸ்க்களில் தப்பித்து வந்தார்.
குழந்தையில்லை எனக்கு...
ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் தன்னுடைய குறையை அப்பட்டமாக பிக் பாஸ் வீட்டில் கூறி அழுதுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த சக போட்டியாளர்களும் கவலையில் தலை குனிந்தப்படி அமர்ந்திருந்தனர்.
இந்த சூழ்நிலையை பார்க்கும் போது பல இன்னல்களை ரக்ஷிதா மனதில வைத்துக் கொண்டு தான் இவர் இவ்வாறு அமைதியாக இருக்கிறார் என முனுமுனுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இது அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது.