பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அசிங்கப்பட்ட இலங்கை பெண்! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை அறிவில்லையென இலங்கை பெண் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
சமீப காலமாக தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் போட்டியாக பிக்பாஸ் பார்க்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் சுமார் 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து வீட்டில் கழிவறை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கமெராக்கள் வைக்கப்பட்டிருக்கும். உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணித்தியாலங்களும் கண்காணிக்கப்படும்.
பிக் பாஸ் சீசன் 6
இதன்படி, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் செல்கிறது, இதில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் அமுதவாணன் மற்றும் ஜனனி இருவரும் வீட்டினுள் ஒன்றாகவே தான் இருந்து வருகின்றனர்.
இதனை கடந்த வாரங்களில் சக போட்டியாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் ஜனனி எதையும் கண்டுக் கொள்ளவில்லை.
ஜனனி கடந்த சில வாரங்களாக சக போட்டியாளர்களை சத்தம் போடுதல், கத்தி அழுதல், அவதூறாக பேசுதல் என பல வேலைகளை பார்த்து வருகிறார்.
பரபரப்பான ப்ரோமோ
இவையனைத்தை ப்ரோமோவிற்காக பண்ணுகிறார்கள் என ரசிகர்கள் தெரிவித்து அவரின் குறும்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
மேலும் இந்த வாரம் பிக் பாஸ் நடந்த டாஸ்க்கில் மூளையில்லை என சக போட்டியாளர்களை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அசீம் மற்றும் மணி ஜனனியை கண்டித்துள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.