புதிய டுவிஸ்ட்டை கொடுத்து போட்டியாளர்களை திசைதிருப்பும் பிக்பாஸ்! திணரும் பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை திசைத்திருப்புவதற்காக பிக் பாஸ் பல வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்.
நிறைவிற்கு வரும் பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன்6 நிறைவு காலத்தை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் முடித்துக் கொள்ள போகிறது. இதிலிருக்கும் போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக அசீம், அமுதவாணன், விக்ரமன், சிவின், மைனா உள்ளிட்ட போட்டியாளர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
இதில் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இவரின் வெளியேற்றத்தை சக போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சிவின் தான் மிகவும் அழுது புலம்பினார். ஏனெனின் சிவின் கதிரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
போட்டியாளர்களை திசைத்திருப்பும் பிக் பாஸ்
இந்நிலையில் பிக் பாஸ் வரலாறு காணாத வகையில் பணப்பெட்டியொன்று மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதனை யார் எடுப்பார் என ரசிகர்கள் முதல் போட்டியாளர்கள் வரை அணைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு அத்திவாரம் போடும் வகையில் ஃப்னலிஸ்ட்டுக்கு தெரிவான போட்டியாளர்களை திசைத்திருப்புவதற்காக அவர்களின் நினைவுகளை மீட்டுக் கொடுத்துள்ளார்.
இதனால் போட்டியாளர்கள் எமோஷனலாகி, பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என பிக் பாஸ் எதிர்பார்க்கிறார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.