ஒரு முட்டைக்காக ரவுண்டு கட்டி சண்டையிடும் பிரபலங்கள்! கண்கலங்கிய மகேஸ்வரி: நடந்தது என்ன?
பிக் பாஸ் விட்டில் தொடர்ந்து பெண் பேட்டியாளர்களை அசீம் அவமானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் பார்க்கும் போட்டியாக பிக் பாஸ் சீசன் 6 மாறியுள்ளது. இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆரம்பித்து தற்போது சீசன் 6 சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் மீடியா சார்ந்த பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த சீசனில் ஜிபி முத்து தான் தவரிக்க முடியாத சில காரணங்களால் வெளியேறினார். இதனை ஒரு வாரத்திற்கு ஒர போட்டியாளர் வீதம் வெளியேறியுள்ளார்கள்.
இதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து தற்போத வரைக்கும் சுமார் 15 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள் இந்நிலையில் இறுதி வாரம் என்பதால் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டனர்.
முட்டைக்காக அடித்துக் கொள்ளும் பிரபலங்கள்
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் விக்ரமனுக்கு ஒரு முட்டையை மணி தரவில்லை என்பதால் மஸே்வரிக்கும் மணிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையில் எல்லைமீறிய வார்த்தைகளால் மணிகண்டன் பேசியுள்ளார். இவர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது அசீமும் இடையில் வந்து தேவையற்ற வார்த்தைகளால் அசீம் திட்டியுள்ளார்.
இந்த பிரச்சினைக்குள் ஏன் அசீம் வருகிறார்? அவருக்கும் சண்டைக்கும் எந்த பிரச்சினையும் இல்லையென்றும் மகேஸ்வரி விக்ரமனிடம் அழுதுள்ளார்கள். மேலும் அசீம் இது போன்று பல இடங்களை தன்னை அசிங்கப்படுத்தி இருப்பதாகவும் இவர் கூறியிருந்தார்.
இது போன்று குற்றஞ்சாட்டுகளால் அசீம் டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.