நேரடியாக பைனலுக்கு சென்ற போட்டியாளர்! சோகத்தில் வீட்டைவிட்டு வெளியேறி பெண் போட்டியாளர்
பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக பைனலுக்கு அமுதவானன் சென்ற நிலையில், ரச்சிதா சோகமான முகத்துடன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பைனலுக்கு சென்ற அமுதவானன்
பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ள நிலையில் 91 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வந்த நிலையில், இதில் அமுதவானன் அதிக மதிப்பெண் எடுத்து முதல் இடத்திற்கு சென்றதுடன், முதல் பைலிஸ்ட்டாவாகவும் சென்றுள்ளார்.
ஆனால் அமுதவானன் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்ததால், அவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிக்கெட்டை வென்று முதல் பைனலிஸ்ட்டாக சென்றுள்ளார்.
மீதம் 5 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில், ADK, ரட்சிதா, ஷவின் கணேஷ் என மூன்று பேர் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர்.
ஏடிகே இந்த வாரம் வெளிறுவார் என்று நினைத்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரச்சிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் எந்தவொரு சண்டையிலும் சிக்காமல் இருந்தார்.
ஆனால் தனலட்சுமி மகேஷ்வரி என வலிமையான போட்டியாளர்களை வெளியே அனுப்பிய பிக்பாஸை, ரச்சிதா எதுவும் செய்யாமல் இவ்வளவு நாள் எப்படி உள்ளே இருந்தார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.