கமல் கேட்ட கேள்விக்கு கண்கலங்கியப்படி பதிலளித்த போட்டியாளர்கள்! என்ன கேட்டார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் ஒரு முக்கிய கேள்வியை கமல் அவர்கள் கேட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் முக்கிய போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தனி உள்ளிட்ட போட்டியாளர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்களில் ஆரம்பத்திலிருந்து அசீம் தான் மக்களின் வெற்றியாளனாக தெரிவாகி வருகிறார். மேலும் அசீம் மட்டும் ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் உண்மை முகத்தைக் காட்டுகிறார் என்ற பெயரும் இவருக்கு இருக்கிறது.
இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போதும் இவர் அடிக்கடி பொது இடத்தில் கத்தி பேசியுள்ளதாகவும் பெண்களிடம் தவறாக பேசியுள்ளதாகவும் பல குற்றஞ்சாட்டுகள் எழுந்தது.
இதனால் மக்கள் மத்தியில் வளர்ந்துக் கொண்டிருந்த அசீம் சற்று தளர்ந்து விக்ரமன் அவர்கள் தற்போது முன்னிலையில் இருக்கிறார். இவர்களுக்கான வாக்குகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மீண்டும் குட்டைய குழுப்பியுள்ளார் கமல்
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேறிய அணைத்து போட்டியாளர்களும் வருகை தந்துள்ளார்கள். இதனால் பல டுவிஸ்ட்டுள்ள கேள்விகளை கமல் அவர்கள் கேட்டு வருகிறார்கள். இதனால் போட்டியாளர்கள் பெரும் குழப்பத்தில் இருப்பது போன்று தெரிகிறது.
இதன்படி, இன்றைய தினம் வெளியேறிய போட்டியாளர்கள் மற்றும் களத்தில் இருக்கும் போட்டியாளர்களிடம் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என கேட்டுள்ளார்.
இதற்கு போட்டியாளர்கள் அணைவரும் கண்கலங்கியப்படி சிவின் - ரக்ஷிதா மகாலட்சுமி, கதிர் - தனலெட்சுமி, தனவெட்சுமி - அசீம் என போட்டியாளர்கள் காரணத்துடன் கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.