பிக் பாஸ் வீட்டில் பூமர் தாத்தாவாக மாறிய முக்கிய போட்டியாளர்! வச்சி செய்த அமுதவாணன்..
பிக் பாஸ் வீட்டில் பூமர் தாத்தாவாக விக்ரமன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 5 வெகு விமர்சையாக கடந்து சென்ற நிலையில் தற்போது சீசன் 6 கோலாகலமாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பெருமளவிலான போட்டியாளர்கள் சின்னத்திரையிலிருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரபலங்களில் மைனா, ரக்ஷிதா இருவரும் தான் சேவ் கேம் விளையாடுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ஆனாலும் இவர்கள் இருவரும் தற்போது வரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வருகிறார்கள்.
இந்த வாரம் கண்டிப்பாக இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக இருக்கும் கதிர் மற்றும் அசீம் தங்களின் முழு பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். மேலும் பிக் பாஸ் ஓட்டிங்கிலும் இவர்களுக்கான ரசிகர்கள் தான் அதிகம் காணப்படுகிறது.
பூமராக மாறிய முக்கிய போட்டியாளர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் அவாட்டிங் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் “ பூமர் தாத்தா” அவாட்டை அமுதவாணன் கொடுத்துள்ளார்.
இதனால் கடுப்பான விக்ரமன் நான் பூமர் இல்லை ஆனால் நீங்கள் கொடுத்ததற்காக ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இவரின் பதில் அமுதவாணனுக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும் என சக போட்டியாளர்கள் முனுமுனுத்துள்ளனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.