பிக்பாஸில் டயாப்பருடன் திரிந்தாரா மைனா நந்தினி? வருத்தத்தில் கணவர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட மைனா நந்தினியை உருவக்கேலி செய்துள்ள நிலையில், அவரது கணவர் வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 10வது வாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டியில் மைனா நந்தினி வெற்றிபெற்ற நாமினேஷலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
குறித்த டாஸ்க் மைனா நந்தினியை ஜெயிக்க வைப்பதற்கு பிரபல ரிவி கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்து வருவதுடன், ஒரு யூரியூப் சேனல் அவரை உருவக்கேலியும் செய்துள்ளது.
ஆம் குறித்த டாஸ்கில் போட்டியாளர்கள் டயாப்பர் போன்ற உடையினை அணிந்திருந்தனர். அப்போது மைனா நந்தினியும் அணிந்திருந்த நிலையில் அவரது பின் பகுதியை உருவ கேலி செய்துள்ளனர்.
இதனை மைனாவின் கணவர் யோகேஷ் கடுமையாக வருத்தம் தெரிவித்து பேசியுள்ளார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆனால் இருப்பினும் பலர் மைனா நந்தினிக்கு பிரபலடிவி உதவி செய்து வருவதாகவும், அதனால் இந்த வாரம் நாமினேஷனலிருந்து தப்பித்துள்ளதாகவும், கடந்த வாரம் காப்பற்றப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.