ஜனனி பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற இதுதான் காரணமா? உண்மையை நடுவீட்டில் போட்டுடைத்த முக்கிய போட்டியாளர்!
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக விளையாடி ஜனனியை வெளியேறியதற்கு அமுதவாணன் தான் முக்கிய காரணம் என அசிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு சென்ற ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் சுமார் 21 பிரபலங்கள் ஆரம்பத்தில் களமிறங்கியிருந்தார்கள்.
இந்த போட்டியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு இலங்கை போட்டியாளர் பங்குபற்றுவார்.
இதன்படி, இந்த சீசனில் ஜனனி என்ற தொகுப்பாளர் ஒருவர் பங்கேற்றார்.
இவர் சுமார் 70 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் லக் போட்டியாளராக விளையாடி வந்தார்.
அமுதவாணணை கண்டித்த அசீம்
இந்நிலையில் கடந்த வாரத்திற்கு முந்நைய வாரம் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறினாலும் அவரினால் ஏற்படும் பிரச்சினைகள் ஓயவில்லை.
இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்வதற்கு அமுதவாணன் தான் முக்கிய காரணம் என அசீம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இவர் தன்னுடைய விளையாட்டை விளையாடமல் ஜனனிக்கான டாஸ்க்களை இவர் விளையாடிதால் தான் இவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என சக போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் சந்தேகித்துள்ளனர்.
அந்தவகையில் இன்றைய தினம் வெளியான பிக் பாஸ் வீடியோவில் அசீம் இதனை அப்பட்டமாக கூறியுள்ளார்.