பிக் பாஸ் வீட்டில் இருக்க உனக்கு தகுதியில்லை! சரமாரியாக திட்டிதீர்த்த பிரபலம்; ஆடிப்போன மைனா
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் மைனாவை சரமாறியாக அவருடைய கணவர் திட்டிதீர்த்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் முக்கிய போட்டியாளரான தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அசிம், விக்ரமன், சிவின் மற்றும் மைனா உள்ளிட்டோர் முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
மைனாவை திட்டிதீர்த்த பிரபலம்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை பார்வையிடுவதற்காக போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது 'மைனாவை நீ பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியில்லை. அப்படி தான் விளையாடுற', என குற்றஞ்சுமத்தியவிட்டு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனை பார்த்த பின்னர் இனிவரும் காலங்களில் பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் ஆகும் அளவிற்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.