பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? ராஜுவுக்கு வாய்ப்பில்லையாம்.. அடித்து கூறிய நபர்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் தனது தோழி அக்ஷராவுடன் வெளியேறிய வருண் போகும் போது கொளுத்திப் போட்ட ஜோஷியம் சோஷியல் மீடியாவில் விவாத பொருளாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டிலை யார் தட்டிச் செல்ல போகிறார் என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது.
ராஜுவுக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், வருண் வேறு ஒரு நபருக்கு டைட்டில் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
சிபி தான் இந்த பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்வான் என்றும் நல்லா கேம் ஆடுற என சிபி மற்றும் ராஜு இருவருக்கும் மத்தியில் அடித்து கூறுவது போல வருண் சொல்லி சென்றது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பிக் பாஸ் டைட்டிலை சிபி ஜெயிக்க வாய்ப்பிருக்கா என்றும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வருண் சொல்வது போல சிபிக்கு கிடைக்குமா? என்றால் மக்கள் ஓட்டுப் போடுவதன் மூலம் பிக் பாஸ் டைட்டில் வின்னரை தேர்வு செய்தால் நிச்சயம் கிடைக்காது என்றே பெருவாரியான ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ராஜு, பிரியங்கா, பாவனி எல்லாம் சேவ் ஆன பிறகு தான் கடைசியாக சிபி சேவ் ஆகியுள்ளார்.
அவருக்கான ரசிகர்கள் கூட்டம் மிகவும் குறைவு என்றும் நிச்சயம் இந்த டைட்டில் சிபிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவாதித்து வருகின்றனர்.