பிக்பாஸை காரசாரமாக கொண்டு செல்லும் போட்டியாளர்! மேடையில் அப்பட்டமாக உண்மையை ஒப்புக்கொண்ட பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் இந்த சீசனை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் போட்டியாளர்களுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது.
சேவ் கேம் விளையாடும் போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த சீசன்களை விட சற்று வித்தியாசமாக நகர்ந்து செல்கிறது. இதில் பங்கேற்ற பிரபலங்கள் தங்களுடைய முழு பங்களிப்பை காட்டாதது தான் இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அதிகமான விமர்சகங்களுக்கு ஆளானதால் இந்த சீசனில் உள்ளே வந்த பிரபலங்கள் தங்களின் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை கவனித்த ரசிகர்கள் மைனா மற்றம் ரக்ஷிதா என பல பிரபலங்களை கூறியிருக்கிறார்கள். ஆனால் பத்தாவது வாரம் வரையிலும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.
டைட்டில் வின்னராகும் அசீம்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிரபலங்களில் அசீம் சற்று வித்தியாசமாக நடந்துக் கொள்கிறார். அவரின் இயல்பு வாழ்க்கை மாறவில்லை. வெளியில் இருப்பது போல் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார்கள்.
இதனால் பிக் பாஸ் வீட்டிலுள்ள பிரபலங்களுக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் எப்போது நம்பர் 1 ஆகவே இருக்கிறார்.
பத்து வாரங்களில் அதிகமான நாமினேஷன்களில் சிக்கியுள்ளார். ஆனால் இவர் தான முதலாவது ஆளாக சேவ் ஆவார்.
உண்மையை ஓப்புக் கொண்ட போட்டியாளர்கள்
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யமான போட்டியாளர்களாக அமுதவாணன் மற்றும் அசீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதில் அசிம் அதிகமான போட்டியாளர்களால் விரும்படுகிறார் என்ற உண்மை இதிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.