பிக்பாஸ் வீட்டில் கபட நாடக வேடதாரியாக இருக்கும் பெண் போட்டியாளர்! முகத்திரையை கிழித்த கமல்
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் கபட நாடக வேடதாரியாக ரக்ஷிதா மற்றும் விக்ரமனை குறிப்பிட்டு போட்டியாளர்கள் பேசியுள்ளனர்.
டபுள் எவிக்ஷனில் சிக்கிய பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது ஆறாவது சீசன் செல்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த சீசனில் பிரபலமான மைனா நந்தனி, ரக்ஷிதா மகாலட்சுமி, அசீம் என பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். மேலும் ஆறாவது சீசனில் ஒன்பதாவது வாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
தொடர்ந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் எனவும் கமல் சென்ற வாரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்று அசீம் முன்னிலையில் இருக்கிறார். குறைவான வாக்குகள் பெற்று ஆயிஷா மற்றும் ராம் டபுள் எவிக்ஷனில் வெளிறேவுள்ளார்கள்.
முகத்திரையை கிழிக்கும் கமல்
தொடர்ந்து பிக் பாஸ் ஆரம்பித்து சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரைக்கும் தனது உண்மையான முகத்தைக் காட்டாமல் “சேவ் கேம்” விளையாடும் போட்டியாளர்களாக ரக்ஷிதா மற்றும் விக்ரமன் போட்டியாளர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பத்தாவது வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்களில் ரக்ஷிதா வெளியேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.