என்னுடைய விடயத்தில் மூக்கை நுழைத்தால், உன்னை கிழிச்சிருவேன்.. ஆவேசத்தில் வார்த்தையை விட்ட மணி!
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மணிகண்டன், மகேஷ்வரியிடம் கடுமையாக சண்டையிட்டுள்ளார்.
இறுதிக்காலக்கட்டத்தில் பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 6 தற்போது இறுதி காலக்கட்டத்தில் பல டுவிஸ்ட்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் தற்போது 6 போட்டியாளர்கள் மாத்திரமே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த சீசனில் விக்ரமன் தான் டைட்டில் வின்னராவரார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்களில் அசிம் தான் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் போட்டியாளராக காணப்படுகிறார்.
அவரின் கோபத்தினால் இவருக்கு டைட்டில் வின்னர் கிடைக்காது என ரசிகர்கள் கவலை வெளியிட்ட வருகிறார்கள். இதனால் சிவின் அல்லது விக்ரமன் வரலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து கணிப்புக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
கடுமையான சண்டை
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல போட்டிகளை புதிய விருந்தினர் டிடி அவர்கள் நடாத்தினார்.
இதில் போட்டியாளராக அமுதவாணன், சாந்தி மாஸ்டர் மற்றும் விக்ரமன், மகேஸ்வரி உள்ளிட் போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். தொடர்ந்து இந்த போட்டியில் விக்ரமன், மகேஸ்வரி ஜோடி வெற்றிப் பெற்றது.
இதனை தொடர்ந்து மணிகண்டன் விக்ரமனை திட்டிய போது, மகேஷ்வரி மணியிடம் சண்டைக்குச் சென்றுள்ளார்.
இதனால் கடுப்பான மணி கடும் கோபத்துடன் மகேஷ்வரியை திட்டியுள்ளார். மேலும் “பதனீ” என்ற வார்த்தையை கூறிக் கொண்டே சென்றுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.