போட்டியாளர்கள் முன்பு ஓபனாக காதலை கூறிய பிரபலம்! எப்படி சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ஜிபி முத்து அழகாக தன்னிடம் இருக்கும் காதலை மைனாவிடம் வெளிபடுத்தியுள்ளார்.
பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
இவர்களில் பிக் பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்கள் மாத்திரமே இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனின் பிக் பாஸ் சீசன் 6 ன் இது தான் கடைசி வாரமாக பார்க்கப்படுகிறது.
சிறப்பு விருந்தினர் வருகை
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு நாளைக்கு ஒரு போட்டியாளர் வீதம் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்புவிருந்தினராக வரவழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, ஜிபி முத்து , அசல் கோளாறு, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, தனலெட்சுமி, குயின்சி ஆகியோர் இதுவரையில் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் பிக் பாஸ் விட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய ஜிபி முத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் பட்டைய கிளப்பி வருகிறார்.
அழகாக காதலை கூறிய விருந்தினர்
இவர் பிக் பாஸ் கூறும் வரை பிக் பாஸ் வீட்டில் தான் இருப்பார் என பிக் பாஸ் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வெளியேற கூறினாலும் செல்லமாட்டேன் என அழுத்தமாக கூறியிருக்கிறார்.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் தன்னிடம் இருக்கும் காதலை போட்டியாளர்கள் அசந்து போகும்படி கூறியிருக்கிறார். இதற்கு அமுதவாணன் மற்றும் மைனா இருவரும் அந்த இடத்தில் இருந்துள்ளார்கள்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.