ஓபன் நாமினேஷனில் கொத்தாக மாட்டிய பிரபலங்கள்! மைனா கொடுத்த புதிய டுவிஸ்ட்டால் திணறி நின்ற போட்டியாளர்..
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடையிலான ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்களின் பங்களிப்பு
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தாருமாறாக ஒடிக் கொண்டிருக்கிறது. தற்போது 100 நாட்களை நெருங்குவதற்கு குறுகிய நாட்களே இருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் டைட்டில் வின்னராகவதற்கு திட்டமிட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். தற்போது 10 மேற்பட்ட போட்டியாளர்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேறியுள்ளார்கள்.
ஜனனி வெளியேற்றம்
இதற்கு எதிர்மறையாக நேற்றைய தினம் குலுக்கல் முறையில் ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆனால் வாக்குகள் அடிப்படையில் ஏடிகே வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் புதிய டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் ஜனனியை வெளியேற்றியுள்ளார்.
இந்த செய்தி ஜனனி ரசிகர்களுக்கு இது சற்று வியப்படையும் விடயமாக பார்க்கப்படுகிறது.
ஓபன் நாமினேஷன்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்கான தெரிவு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அசீம் மீண்டும் மாட்டியுள்ளார்.
மேலும் அடிக்கடி நாமினேஷனில் சிக்கி வருவதால் இவர் அடுத்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் கணிப்பின் பிரகாரம் அசீம் மட்டும் தான் குரூபிசம் இல்லாமல் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.