பிக் பாஸ் வீட்டில் குமுறி குமுறி அழுது புலம்பிய மைனா! நடந்தது என்ன?..பரபரப்பான ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது மைனா நந்தனி சோகத்தில் குமுறி குமுறி அழுது புலம்பியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது 72 வது நாள் செல்கிறது. இந்த போட்டியிலிருந்து வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்று சுமார் 10 மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
மேலும் பிக் பாஸ் போட்டி தெலுங்கிலும் சென்று கொண்டிருந்தது. இந்த போட்டியை நகர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்தார். தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸ் நிறைவுள்ள நிலையில், தமிழ் பிக் பாஸ் 100 நாட்களை நெருங்கியுள்ளது.
பரபரப்பான ப்ரோமோ
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கான டாஸ்க்கள் கடுமையாக வழங்கப்படுகிறது. மேலும் மக்களின் ஆதரவும் சற்று அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் தங்களின் முழு பங்களிப்பையும் காட்டி வருகிறார்கள்.
இதன்போது மைனா தன்னுடைய வீட்டின் நிலையை யோசித்து குமுறி குமுறி அழுது புலம்பியுள்ளார். அந்தவகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.