பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆயிஷா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆயிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ஆம் திகதி கோலகலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இதில் பங்கேற்கும் போட்டியாளர்களில் பெரும்பாலானோர் சினிமாத்துறையில் சார்ந்தவர்களாவர்.
பிக் பாஸ் தமிழில் பங்குபற்றிய சின்னத்திரை பிரபலங்களில் ஆயிஷாவும் ஒருவர். இவர் சத்யா என்ற சீரியலில் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர்.
ஆயிஷாவின் உருக்கமான பதிவு
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக கடந்த சில வாரங்களாக ஆயிஷா விளையாடினார். ஆன போதிலும் கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் விக்ரமன், ரக்ஷிதா போன்றோர் சேவ்கேம் விளையாடுவதாகவும், ஜனனி ஒரு நல்ல வீராங்னை என்றும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற பின்னர் மகிழ்ச்சியாக உணருவதாகவும்” தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த ஆயிஷா ரசிகர்கள் ஆயிஷாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.