மூழ்கியும் வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பயணிகள் நீராவிக்கப்பல்!
தொலைதூரம் நீண்ட நாள் பயணம் என்பது எப்பொழுதும் கடல் மார்க்க பயணம் ஆகும்.
4 நாட்களில் 1,517 பேரின் உயிரை கடலிலே பலி வாங்கிய சம்பவம் 1912ல் பதிவாகியுள்ளது.
டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் 1912 ஆம் ஆண்டு முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்ட உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்.
ஏப்ரல் 14 1912 ல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதுண்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டது.
இது 2 மணி 40 நிமிடங்களில் முழுதாகவே மூழ்கடிக்கப்பட்டது டைட்டானிக் கடலில் மூழ்கியதும் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்டதும் அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரிய கடல் அழிவாகக் கருதப்பட்டது.
டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாதெனவும் கருதப்பட்டது.
இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு நாட்களுக்கு முன் தனது பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்டன் துறைமுகத்திலிருந்து நியூயோர்க் நகரை நோக்கி ஆரம்பித்தது.
இதன் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் ஆவார். ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது.கடல் தன்மை மிக உறைநிலையாகவே காணப்பட்டது.கடலில் பனிப்பாறைகள் காணப்படுவதாக சில அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்ட போதும் டைட்டானிக்குக்கு கிடைக்கப்பெறவில்லை.
பின் கண்ணில் தென்பட்ட போதும் கப்பலை திருப்பும் முயற்சி பலனளிக்கவில்லை.
மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.
பல கோடி செலவழித்து ஆடம்பரமாக செல்ல உருவாக்கப்பட்ட டைட்டானிக் தனது முதல் பயணத்தை வரலாற்றில் பதிக்க ஆசைப்பட்டது.
அதன் வரலாறு பதியப்பட்டது ஆனால் தனது முதல் பயணத்தை முழுமையாக்காமல் சிதைந்து போனது, உலகின் பிரம்மாண்ட திரை படைப்பாளர் ஜேம்ஸ் கமருனால் அதிக பொருட்செலவில் அருமையான திரைக்கதையால் இந்த சம்பவம் டைட்டானிக் என தலைப்பிடப்பட்டு 1997 நவம்பர் 1 திகதி வெளியானது இன்னும் இந்த அழிவு ஒரு மிகப்பெரிய அழிவாகவே கருதப்படுகிறுது.