திருவண்ணாமலை ஏற்றப்பட்ட பரணி தீபம்.. அதிகாலையில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தை காண மக்கள் கூட்டம் திரண்டு வரும் காட்சி நேரலையில் காட்டப்படுகிறது.
பரணி தீபம் ஏற்றப்பட்டது!
கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா ஆரம்பமாகியது. இந்த விழாவில் முக்கியமானது என பக்தர்களால் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்படவுள்ளது.
அதற்கு முன்னர், அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த காட்சியை நேரில் பார்ப்பதற்காக அதிகாலை கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை பார்க்கவும், மாலையில் மகா தீபத்துடன் அர்த்தநாரீஸ்வரரையும் பார்ப்பதற்காக இன்னும் லட்சக்கணக்கில் மக்கள் வருகை தருவார் என்பதற்காக அந்த பகுதியில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |