அஷ்டலெட்சுமிகளை ஒன்றாக குவிக்கும் பரிகாரம்: இப்போ செஞ்சா சரியிருக்குமாம்..
பொதுவாக கார்த்திகை மாதத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கும்.
இதன்படி, திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
இந்த கோயிலில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது முக்கியம்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என 5 நாட்களாக இந்த தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.
Image -twitter
அந்த வகையில் தீபங்களும் அதன் பலன்களும் தொடர்ந்து பார்க்கலாம்.
தீபங்களின் பரிகாரம்
இந்த நிகழ்விற்கு முதல் நாள் ஏற்றப்படும் தீபம் பரணி காளிக்காக ஏற்றப்படுகின்றது. இதனை ஆதிகால மக்கள் காளி தேவதை என அழைத்தார்கள்.
அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதத்தில் அதற்கான நட்சத்திரத்தில் ஏற்றினால் சிவபெருமானின் அருள் எமக்கு கிடைக்கும் என்பார்கள்.
Image - newsbricks
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் 5 தொழில்களையும் குறிக்கும் நோக்கில் தான் இந்த தீபங்கள் ஏற்றப்படுகின்றது.
திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இறைவன் சன்னிதி உட்பட வீடு முழுவதும் விளக்கேற்றிவழிபட வேண்டும். இதனால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் என்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |