வாழைப்பூ குருமா இந்த மாதிரி வைத்துப் பாருங்க... சுவை டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
சத்தான வாழைப்பூவில் திருநெல்வேலி ஸ்பெஷல் குருமா செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பூ
ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வாழைப்பூ உடலுக்கு ஆரோக்கியத்தினை அளிக்கின்றது.
இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதுடன், ரத்தத்தினை சுத்திகரிக்கவும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
அதுமட்டுமின்றி மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகின்றது. வாழைப்பூயை வடை, பொரியல், சூப், கூட்டு என பல வகைகளில் சமைப்பதுண்டு.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவை வாங்குவதற்கு இல்லத்தரசிகள் சற்று யோசிப்பதும் உண்டும். ஏனெனில் இதனை சுத்தம் செய்வது அதிக நேரம் செலவழித்து செய்ய வேண்டியுள்ளது.
இதில் சிறிதளவு துவர்ப்பு தன்மை இருப்பதால் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதில்லை. இந்நிலையில் வாழைப்பூ குருமா செய்வது குறித்து தெரிந்து கொள்வோம். ஆம் திருநெல்வேலி ஸ்பெஷல் வாழைப்பூ குருமா.

தேவையான பொருட்கள்
வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் - 20(நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (கீறியது)
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
ரகத் தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 3/4 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் வாழைப்பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த வாழைப்பூவை சமைக்கும் வரை மோரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
சமைக்கும் போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி அரைத்து பால் எடுத்து தனியாக வைக்கவும்.
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
மேலும் இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

பின்பு மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத்தூளை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதி வந்ததும், வாழைப்பூவை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குழம்பு அதிக தண்ணியாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு பின்பு இறக்கினால் வாழைப்பூ குருமா தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |