விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மான்: வயிற்றிலிருந்து வெளிவந்த குட்டி! கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி
இந்தியாவில் சாலை விபத்து ஒன்றில் தாய் மான் இறந்துவிட அதன் வயிற்றில் இருந்த மான் குட்டி பிறந்து தவழ்ந்து சென்ற சோக காட்சி காண்பவர்களின் கண்களை கலங்கவைத்துள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் வழக்கமாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது கர்ப்பமான மான் ஒன்று சாலையை கடக்க துள்ளிக் குதித்து வந்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்று சினை மான் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மானின் வயிறு பிரிந்த நிலையில் அதிலிருந்து குட்டி வெளியே வந்துள்ளது. இதனை அவதானித்து வேதனையுடன் இருந்த மக்கள் எழும்ப முடியாமல் இருந்த குட்டிக்கு சிறிது தண்ணீர் கொடுத்த நிலையில், குட்டி மான் சில அடிகள் தத்தி தத்தி நடந்துள்ளது.
பின்பு பக்தர்கள் அளித்த தகவலின் பேரில், திருப்பதி உயிரியியல் பூங்கா உறுப்பினர்கள் இறந்த தாய் மான் மற்றும் குட்டியினை மீட்டு தற்போது குட்டி மானிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.