திருச்செந்தூர் கோவிலில் நடந்த சூரசம்ஹாரம்... நேரலை காணொளி இதோ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
சூரசம்ஹாரம்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4ம் திருநாளான வியாழக்கிறமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதுடன், தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறுமாம்.
சூரசம்ஹாரத்தின் நேரலை காட்சியினை தற்போது காணலாம்.
tiruchendur-soorasamharam