வீட்டில் வளர்க்கும் மணி பிளாண்டை பாதுகாக்க ஈஸியான டிப்ஸ்...
பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளை அழகாக்கவும், வீட்டுத்தோட்டமாக மாற்றவும் சில செடிகளை வீட்டிற்குள் வீட்டிற்கு வெளியிலும் வளர்ப்பதுண்டு.
அப்படி வீடுகளில் வளர்க்கும் செடிகளில் மணி பிளாண்ட் முக்கியத்துவம் பெருகிறது. இந்த மணி பிளாண்டை வீடுகளில் வளர்க்கும் போது பல விடயங்களை கனத்தில் கொண்டு கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும்.
வீடுகளில் மணி பிளாண்ட் வளர்ப்பதன் மூலம் நிதி நெருக்கடி, கடன் பிரச்சினைகள் இல்லாமல் செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும், மணிபிளாண்ட் வளர்த்தால் சொத்து, சுகம், ஆரோக்கியம், சந்தோஷம் என்பன நிரம்பி வழியும். அது மட்டுமில்லாமல் இதனை தென்கிழக்கு திசையில் வைத்தால் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கும். இது வீட்டை தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் வைக்கிறது.
மணி பிளாண்ட் வளர்க்க
இந்த மணி பிளாண்ட் செடியை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது அதனால் அதிக தண்ணீரை ஊற்ற வேண்டாம். மணிபிளாண்டை முறையாக பராமரிக்காவிட்டால் இலைகளில் நீர்ச்சத்து வறண்டு வெள்ளையாகி காய்ந்து உதிர ஆரம்பித்து விடும்.
மணி பிளாண்ட் வைத்திருக்கும் தொட்டியில் இயற்கை உரம் சேர்த்து வரவேண்டும் .
இந்த செடியை அதிக சூரிய ஒளி படாமல் நிழல் தென்படும் இடத்தில் வைத்து தான் வளர்க்க வேண்டும்.
இந்த மணி பிளாண்ட் மண்ணை விட தண்ணீரில் அதிகம் வளரும். அதனால் அடிக்கடி தண்ணீர் மாற்றி வளர்க்கலாம்.
மணி பிளாண்டிற்கு அதிக தண்ணீர் ஊற்றினால் செடி மூழ்கி விடும். அதனால் அளவுக்கதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |