முட்டைகளை வாங்கி ஸ்டாக் வைக்கும் பழக்கம் இருக்கா? இந்த டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக சிலர் அடிக்கடி கடைக்குச் செல்வதற்கு சிரமப்பட்டு கொண்டு பொருட்களை தொகையாக வாங்கி களஞ்சியப்படுத்திவிடுவார்கள்.
அந்த வகையில் அளவிற்கு அதிகமான முட்டைகளை வாங்கி அப்படியே சமையலறையிலேயே வைத்துவிடுவார்கள்.
இப்படி எந்தவிதமான களஞ்சியப்படுத்தலும் இல்லாமல் இருப்பதால் முட்டை சீக்கிரம் வீணாகி விடும்.
இதன்படி, அளவிற்கு அதிகமான முட்டை வாங்கினால் எப்படி களஞ்சியப்படுத்தி வைப்பது என்பது தொடர்ந்து பார்க்கலாம்.
கெட்டு போகாமல் எப்படி பாதுகாப்பது?
1. முட்டையை கெட்டு போகாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் அதனை குளிரூட்டில் வைத்து விட வேண்டும். குளிர்ச்சியாக இருக்கும் பொழுது நுண்ணங்கிகள் தொழிற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருக்கின்றது.
2. முட்டையை வாங்கும் போது சால்மோனெல்லா என்ற நோயிற்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதா? என ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். தரசான்றிதழ் இல்லாத முட்டைகளை அதிகமாக வாங்க கூடாது.
3. குளிரூட்டிலிருந்து முட்டையை வெளியில் எடுத்தவுடன் சமைக்கக் கூடாதாம். வெளியில் எடுத்து அரை மணி நேரத்திற்கு பின்னர் தான் சமைக்க வேண்டும்.
4. முட்டையை ஈரமில்லாத இடங்களில் தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |