ஈஸ்வரி பெட்ரூமிற்குள் வந்ததால் ஒரு எபிசோடில் சாமியாரான கோபி
ராதிகாவையும் கோபியும் ஒன்றாக தூங்க விட கூடாது என நினைத்து கோபியுடன் ஈஸ்வரியும் சேர்ந்து வந்து படுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவர் பிரிந்து தன்னுடைய குடும்பத்தை தனிப் பெண்ணாக இருந்து எப்படி சாதிக்கிறார் என்பதனை மூல கருத்தாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகின்றது.
பாக்கியாவிற்கு என எதிர்ப்பு வந்தாலும் தனியாளாக நின்று சாதிக்கும் வலிமையை கொடுத்து கதையை திசைத்திருப்பியுள்ளார் இயக்குநர்.
இப்படியொரு நிலையில், தற்போது பாக்கியாவின் இரு மகன்களின் திருமண வாழ்க்கையிலும் சிக்கல் வந்துள்ளது. இதற்கு தனியாக முடிவு எடுக்க முடியாத பாக்கியா கோபியின் உதவியை நாட முயற்சிக்கிறார்.
ஆனால் இதனை ராதிகா நடுவில் வந்த கெடுத்து விடுவார் போல் தெரிகின்றது. அதிலும் பாக்கியாவிடம் வீண் வம்பிழுத்து என்ன விடயம் என பிடுங்க முயற்சிக்கிறார். பாக்கியா எதுவும் கூறாமல் சென்று விடுகிறார்.
சாமியாரான கோபி
இந்த நிலையில், பாக்கியாவிடம் செழியன் வசமாக கோயிலில் வைத்து மாட்டிக் கொள்கிறார். பின்னர் பாதி கதையை மறைத்து பாக்கியாவிடம் கூறி காப்பாற்றுமாறு கூறுகிறார்.
மேலும் அமிர்தாவின் கணவர் வீட்டிற்குள் வர முயற்சி செய்யும் போது வசமாக மாட்டிக் கொள்கிறார். பாக்கியா கணேஷின் வீட்டிற்கு சென்று 1 மாதம் கால அவகாசம் கேட்டு வந்துள்ளார்.
இந்த கதை ஒரு புறம் நகர, கோபியும் ராதிகாவும் ஒன்றாக இருக்க கூடாது என நினைத்த ஈஸ்வரி படுக்கையறை வரை வந்து கோபியை பிரித்து தனியாக படுத்து கொள்கிறார்.
ராதிகாவை தனியாக தரையில் படுக்க வைத்து விட்டார். இதனால் ராதிகா செம்ம கடுப்பில் படுத்து கொள்கிறார்.
சீரியலில் பிஸியாக இருந்தாலும் கையில் புத்தகத்துடன், தலையில் பட்டையுடன் சாமியார் போல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சதிஸ் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ ஒரே எபிசோட்டில் சாமியாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |