மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? சூப்பரான டிப்ஸ்!
பல வகையான மாவுகளை மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், முக்கியமாக கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. மேலும், மாவு விரைவில் கெட்டுப்போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.
முறையாக மாவை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்தால் மாவு நீண்ட காலத்திற்கு கெடாமல் இருப்பதோடு, அது புதிதாகவும் இருக்கும். அப்படி, மாவை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
முதலில், மாவை காற்று புகாத பாத்திரங்களில் மாவை அறைகளில் வைக்கலாம். இறுக்கமான மூடி கொண்ட உலோக பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் எளிதில் பூச்சிகள் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது.
அதன் பின்னர், அதிக அளவு மாவை வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம். பலா் மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அதன் மூலம் மாவில் பூச்சிகள் ஊடுருவாமல் தடுக்கின்றனர்.
மேலும், பூச்சிகளை தடுக்க பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதாவது 3 அல்லது 4 பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் மாவை பூச்சிகள் தாக்காது. மேலும் மாவு இருக்கும் பாத்திரங்களைச் சுற்றி கிராம்புகளைத் தூவலாம்.
அதன் மூலம் பூச்சிகள் அண்டாமல் மாவை பாதுகாக்கலாம். கூகுள் மேப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்.. உற்சாகத்தில் பயனாளர்கள் ஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும், உலகத்தையே நுனி விரலில் தெரிந்துகொள்ளலாம்.
அந்த வகையில், இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் மேப் அதை சுலபமாகி விட்டது. எங்காவது புதிய இடங்களுக்கு செல்வதாக இருந்தால் கூகுள் மேப்பில் தேடினால் போதும். போவதற்கு எவ்வளவு நேரமாகும்? எந்த வழியாக செல்லலாம்? எத்தனை கிலோமீட்டர்? என அனைத்து விவரங்களையும் கொடுத்து விடும்.
தற்போது, கூகுள் மேப்பில் புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது கூகுள். அந்த புதிய அம்சத்தின் மூலம் விடுபட்ட சாலைகளை மேப்பில் சேர்க்கவும், சாலையின் பெயர்களை மாற்றவும், புதிய மேப்புகளை வரையவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை, வரும் மாதம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த புதிய அம்சம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.