Neeya Naana: மருமகளை நினைத்து கதறியழும் மாமியார்! அரங்கமே சோகத்தில் ஆழ்ந்த தருணம்
நீயா நானா நிகழ்ச்சியில் தனிக்குடித்தனம் போன மருமகள் மற்றும் மாமியார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் தனிக்குடித்தனம் போன மருமகள் மற்றும் மாமியார் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது. வீட்டை விட்டு தனிக்குடித்தனம் சென்ற மருமகள் தனது நியாயத்தை கூறுகின்றனர்.

அதே போன்று எப்பொழுதும் எதிரும், புதிருமாக இருக்கும் மாமியார் மருமகள்களை தான் நாம் அதிகமாக அவதானித்திருப்போம். ஆனால் இங்கு அரங்கத்தில் நிகழ்ந்த பாசப்போராட்டம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
அதாவது மாமியார் ஒரு மருமகளுக்கு தாயாக மாறியுள்ள தருணத்தையும், அதனை அவர்கள் கண்ணீர் மூலமாக வெளிக்காட்டியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |