அந்தரங்க பகுதிகளில் இருக்கும் கருமையை இருந்த தடம் தெரியாமல் மறைக்க சூப்பரான டிப்ஸ்!
பொதுவாக பெண்களுக்கு அந்தரங்கு பகுதிகளில் கருமை காணப்படுவது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கும். இதனை சரிச்செய்ய இசாயனம் கலந்த கிரீம்கள் உபயோகிப்பார்கள்.
ஆனால் இது தற்காலிக தீர்வை தருமே தவிற நிரந்தர தீர்வை பெற முடியாது. இது போன்ற பிரச்சினைகள் காற்றோட்டம் குறைவாக காணப்படுவதால் தான் ஏற்படுகிறது.
குறிப்பாக பெண்களின் அந்தரங்கப் பகுதியில் கரும்புள்ளிகளுக்கு இது தான் முதன்மை காரணமாக அமைகிறது.
அந்த வகையில் அந்தரங்க பகுதிகளில் காணப்படும் இறந்த செல்களை அகற்ற முடியாததால் இந்த பகுதிகள் கருமை உள்ளன.
அவற்றை எவ்வாறு சரிச் செய்வது குறித்து தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.
கருமையை ஓட ஓட விரட்டும் சில டிப்ஸ்
- கருமையுள்ளவர்கள் 10 சொட்டு ரோஸ் வாட்டருடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காட்டன் துணி அல்லது பஞ்சை பயன்படுத்தி கருமையாக இருக்கும் இடங்களுக்கு தடவ வேண்டும்.
இவ்வாறு செய்வதால் இறந்த செல்கள் அகற்றப்படுகிறது.
- தொடர்ந்து மஞ்சள் கிருமிகளை அகற்றுவதில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன்படி,ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன், இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, அந்தரங்கப் பகுதியில் தடவி சுமார் 30 நிமிடங்கள் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மேற்குறிப்பிட்ட ரெமடியை வாரத்திற்கு மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.
- ரோஸ் வாட்டர் சருமத்திலிருக்கும் கருமையை போக்க பயன்படுத்துவார்கள். அந்தவகையில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் செய்து அந்தரங்க பகுதிகளில் தடவினால் காலப்போக்கில் கருமை மாறும்.
மேற்குறிப்பிட்ட பேஸ்ட்டை 20 நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும்.
- இதனை தொடர்ந்து கருமையுள்ளவர்களுக்கு இந்த ரெமடி நூறு சதவீதம் நன்மையளிக்கிறது. 1 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து கருமையுள்ள இடங்களுக்கு இரவில் பூசிக் கொண்டு தூங்க வேண்டும்.
இதனை காலையில் கழுவும் போது கருமை மாறும்.
- மேற்குறிப்பிட்ட ரெமடிகளை விட இது இலகுவாக இருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவை அந்தரங்கப் பகுதி தடவி, நன்றாக உலர்ந்ததும் மென்மையான காட்டன் தூணியால் துடைக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்வதால் கருமை தன்னால் மறைய ஆரம்பிக்கும்.