சீஸ், மற்றும் பட்டர் வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?
கடைகளில் சீஸ் மற்றும் பட்டர் வாங்கும் போது அது கலப்படமானவையா? இல்லையா என்பதை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சீஸ், பட்டர்
நாம் கூடுதலாக சாப்பிடக்கூடிய பொருட்களாக இந்த பால் சார்நத பொருட்கள் விளங்குகின்றன. ஆனால் இந்த உணவுகள் வீட்டில் அநேகமாக செய்யப்படுவதில்லை.
இதை கடைகளில் தான் நாம் வாங்குவது அதிகம். சீஸ் நாம் பார்த்து வாங்கும் போது கலப்படம் அற்ற சீஸாக இருந்தால் சீஸில் லேசான ஒரு வாசனை இருக்கும்.
எனவே நீங்கள் கடையிலிருந்து சீஸ் வாங்கும் பொழுது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து பாருங்கள். சீஸை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.
சில நிமிடங்கள் கழித்து அதில் ஓரிரு துளிகள் அயோடின் டிஞ்சர் சேர்க்கவும். சீஸின் நிறம் நீல நிறமாக மாறினால் அது கலப்படம் செய்யப்பட்ட சீஸ் என்று நீங்கள் போலியான சீஸ் இறுக்கமாக இருக்கும்.
அதனை இழுக்கும் பொழுது ரப்பர் போல இருக்கும். சுத்தமான சீஸ் இது போல இருக்காது. எனவே கடைகளில் பால் சார்ந்த பொருட்களை வாங்கும் போது இந்த விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும்.