சமையலறையில் இந்த பிரச்சனை தொந்தரவா இருக்கா? அப்போது இது உங்களுக்காக தான்..
பொதுவாக வீடுகளில் சமையலறையில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாத இடங்களை பார்க்க முடியாது.
முறையான பராமரிப்பு மற்றும் சமைக்கும் பொழுது கவனம் இருந்தால் தான் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் கட்டுபடுத்த முடியும்.
தரை, கவுண்டர் டாப்பு ஆகிய இடங்களில் எண்ணெய் படிவு இருந்தால், அதனை சுத்தம் செய்வது கடினம். ஈரமான துணியால் துடைப்பது எண்ணெய் அதிகமாக ஒட்டிக்கொள்ளும்.
இருப்பினும், சில சூப்பர் சமையலறை குறிப்புக்களை பின்பற்றி வந்தால் எளிமையாக எண்ணெய் பிரச்சினைகளை கட்டுக்குள் வைக்கலாம்.
அப்படியாயின், சமையலறையை அசுத்தப்படுத்தும் எண்ணெய் பிசுபிசுப்பை எப்படி இலகுவாக இல்லாமலாக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எண்ணெய் பிசுபிசுப்பை இல்லாமல் செய்யும் டிப்ஸ்
1. வழக்கமாக சமையலறையில் சமைக்கும்போது எண்ணெய் கசிவுகள் இருப்பது போன்று தெரிந்தால் அதனை ஈரமான துணி கொண்டு துடைக்கும் பொழுது தரையுடன் ஒட்டிக் கொள்ளும். சமையலறையில் எண்ணெய் சிந்தியிருந்தால் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாமல் கோதுமை மா கொஞ்சமாக தூவி சுத்தம் செய்யலாம்.
2. கடலை மா இருந்தால் அதனை எண்ணெய் கொட்டிக் கிடக்கும் இடத்தில் போட்டு காகிதம் அல்லது துண்டு போட்டு துடைக்கலாம்.
3. எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடங்களில் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா தெளித்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட்டு அதன் பின்னர் பஞ்சு அல்லது பேப்பர் பயன்படுத்தி துடைக்கலாம். திரவத்துடன் சூடான தண்ணீர் கலந்து துடைத்தாலும் பிசுபிசுப்பு இல்லாமல் போகும்.
4. செய்தித்தாளை பயன்படுத்தி எண்ணெய்யை துடைத்தால் பிசுபிசுப்பு இல்லாமல் போகும். ஏனெனின் செய்தித்தாள் எண்ணெயை உறிஞ்சி விடும். உடனடியாக அதை அகற்றி குப்பையில் போட்டு விட்டு, சோப்பு கலந்த தண்ணீரை ஊற்றி துடைக்கவும்.
5. பாத்திரம் கழுவும் திரவத்தை சுடு நீருடன் கலந்து பயன்படுத்தும் பொழுது எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் போகும். அந்த தண்ணீரை கொண்டு தரையை சுத்தம் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |