இவங்கள மட்டும் நம்பாதீங்க.. எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் குறிப்பிட்ட சிலரை நம்பினால் நமது வாழ்க்கையையே மாறி விடும். சாணக்கிய நீதியின்படி, எந்தெந்த குணங்களைக் கொண்டவர்கள் அடிக்கடி ஏமாற்றுவார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. பொய்யான சத்தியங்கள்
“நான் இதைச் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என அனைவருக்கும் நம்பிக்கை கொடுப்பவர்களை நம்ப வேண்டாம் என சாணக்கியர் எச்சரிக்கிறார். உங்களால் முடிந்தால் மாத்திரம் இன்னொருவருக்கு நம்பிக்கை கொடுங்கள்.
2. விமர்சனம் செய்பவர்
சிலர் எப்போதும் மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்கள் நாளடைவில் அவர்களின் சுயமரியாதையை கூட விட்டுவிடுவார்கள். அத்தகைய நண்பர்கள் இருந்தால் சற்று விலகி இருப்பது சிறந்தது என சாணக்கியர் கூறுகிறார்.
3. சந்தர்ப்பவாதி
நம்மிள் பலர் சந்தர்ப்பத்திற்கு பழகுபவர்களாக தான் இருக்கிறார்கள். நமது நல்ல நேரங்களில் உடன் இருப்பார்கள். அதே சமயம் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஆதாயத்தை மனதில் கொண்டு நடந்து கொள்பவர்களிடம் அளவுடன் பழகுவது சிறந்தது.
4. புறம் பேசுபவர்கள்
ஒருவர் முன் மற்றவர்களைப் பற்றிப் பேசுபவர்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டும். ஏனெனின் உங்களிடம் மற்றவர்களை பற்றி பேசுவது போன்று அவர்கள் உங்களை பற்றியும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது.
5. இனிமையாகப் பேசுபவர்கள்
ஒருவர் தேவைக்கு அதிகமாக புகழ்ந்து பேசினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சாணக்கியர் எச்சரிக்கிறார். ஏனெனின் இவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |