முகம், கழுத்து என மரு அசிங்க படுத்துகிறதா? வலிக்காம உதிர இந்த சாதாரண உணவு பொருட்கள் போதும்!
மருக்கள் பொதுவாக கைகள், கழுத்து, முகம், கால் மற்றும் உடலின் அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும்.
இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆனால் அவை உங்களுக்கு சங்கடமாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் அழகை கெடுக்கிறது.
இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம். வலிக்காம மருக்களை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு காண்போம்.
பூண்டு
பூண்டை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் அதை மருக்கள் மீது தேய்க்க வேண்டும். அல்லது பூண்டை பேஸ்ட் செய்து மருக்கள் மீது தடவலாம்.
இப்படி செய்தால், சில நாட்களில் மருக்கள் உதிர்ந்து விடும். உடனடி பலன் கிடைக்க பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றை எடுத்து காட்டனில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் மருக்கள் உதிர்ந்து விடும்.

இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 3 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு தோலை எடுத்து மருக்களில் தேய்த்து வந்தால் மருக்கள் நீங்கும். அல்லது உருளைக்கிழங்கு சாற்றை இரவில் மருக்கள் மீது தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவி வந்தால் மருக்கள் நீங்கிவிடும்.

அன்னாசி பழச்சாறு
அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.