பொடுகுத் தொல்லையா? இதை மட்டும் செய்ங்க... 1 வாரத்தில் தீர்வு
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பொடுகுத் தொல்லை காணப்படுகின்றது. தலையில் பொடுகு இருக்கும் பட்சத்தில் தலைமுடி அதிகமாக கொட்டும்.
இந்த அதிகப்படியான பொடுகுத் தொல்லைக்கு அப்பிள் சிடர் வினிகர் சிறந்த தீர்வைப் பெற்றுத் தரக்கூடியது. இதில் அன்டி வைரல், அன்டி பக்டீரியல், அன்டி ஒட்சிசன் போன்றவை நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் அன்டி இம்புளஹேட்டர் பண்புகளானது, நமது தலைமுடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்வதோடு தலைமுடி சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளையும் சரி செய்கின்றது.
இனி இந்த அப்பிள் சிடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்...
அப்பிள் சிடர் வினிகரை இரண்டு மடங்கு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து முடியின் வேர்க்கால்களில் ஸ்ப்ரே செய்து, பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து குளித்துவிட்டால் வேகமாக பொடுகுத் தொல்லை நீங்கிவிடும். இதை வாரத்துக்கு இரு தடவைகள் செய்யலாம்.
அப்பிள் சிடர் வினிகர் - கற்றாழை
அதற்கடுத்ததாக, இந்த அப்பிள் சிடர் வினிகருடன் கற்றாழையை சேர்த்து தலைக்கு பயன்படுத்தலாம்.
அதாவது 2 கரண்டி அப்பிள் சிடர் வினிகர், 4 கரண்டி கற்றாழை ஜெல், 1 கப் தண்ணீர் இவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளவும்.
அப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அதில் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொண்டு, அந்தக் கலவையை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாகத் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, 5 நிமிடங்கள் சிறிது மசாஜ் செய்த பின்னர் ஷெம்பூ கொண்டு தலையை கழுவிக் கொள்ளவும். இதுவும் உங்கள் பொடுகுப் பிரச்சினையை சிறிது சிறிதாக குறைத்துவிடும்.
அப்பிள் சிடர் வினிகர் - அஸ்பரின்
அஸ்பரின் மாத்திரைகள் 2, அப்பிள் சிடர் வினிகர் 4 கரண்டி, தண்ணீர் 1/2 கப் எடுத்துக் கொள்ளவும்.
முதலாவதாக அஸ்பரின் மாத்திரைகளை நன்றாக நொறுக்கி, அப்பிள் சிடர் வினிகருடன் கரைத்து குழைத்து எடுத்துக் கொண்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் தலைமுடியை முதலாவது ஷெம்பூ கொண்டு நன்றாக அலசி விட்டு, அதன் பின்னர் இந்தக் கலவையை கன்டிஷனர் போன்று தலையில் தேய்த்துவிட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு நீரில் கழுவிக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து செய்யும்போது முடி நன்றாக உறுதியாவதுடன் அதிலுள்ள அழுக்குகள், பொடுகு,எண்ணெய்ப்பசை அனைத்தையும் சரி செய்யும்.
அப்பிள் சிடர் வினிகர் - எலுமிச்சைச் சாறு
அப்பிள் சிடர் வினிகர் கால் கப், தண்ணீர் ஒரு கப், எலுமிச்சை பாதி.
ஒரு கப் தண்ணீரில் கால் கப் அப்பிள் சிடர் வினிகர் சேர்த்து அதில் எலுமிச்சைச்சாற்றை கலந்து ஸ்ப்ரே போத்தல் ஒன்றில் எடுத்துவைத்துக் கொண்டு, முடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்துகொண்டு டவல் ஒன்றினால் முடியை கட்டிக்கொள்ள வேண்டும். இதை ஒரு 30 நிமிடங்கள் கழித்து ஷெம்பூ போட்டு கழுவிக் கொள்ளவும்.
பின்குறிப்பு
இந்த அப்பிள் சிடர் வினிகர் பொடுகுத் தொல்லையைப் போக்க பெரிதும் உதவுகிறது என்றாலும் இதை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தும் போது சருமத்தை பாதிக்கும்.
ஒரு போதும் தலையில் வைக்கும் எண்ணெயுடன் இந்த அப்பிள் சிடர் வினிகரை உபயோகப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது பொடுகை அதிகப்படுத்தும்.
இதை அளவுக்கதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்தவும் கூடாது. அதேசமயத்தில் அதிக நேரமும் தலைமுடியில் வைத்திருக்கவும் கூடாது. தலைமுடிக்கு ஒருபோதும் ஒயிட் சிடர் வினிகரை பயன்படுத்தக் கூடாது.
ஏனென்றால் அதில் எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது. இந்த அப்பிள் சிடர் வினிகரில் அதிகமான அமிலத்தன்மை காணப்படுவதால் தண்ணீரில் கலந்தே உபயோகப்படுத்த வேண்டும்.