தினமும் சண்டைக்கு நிற்கும் மாமியாரை சமாளிப்பது எப்படி? இனி இது தெரியாம இருக்காதீங்க
ஒரு பெண் திருமணம் செய்து பெற்றோர்கள் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு வரும் போது மாமியார் என்ற உறவு உருவாகின்றது.
தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளை இன்னொரு மகளாக நினைக்கும் குணம் பெரும்பான்மையினரிடம் இருக்காது.
ஒரு சில வீடுகளை தவிர்த்து பெரும்பான்மையினர் வீட்டில் மாமியார்- மருமகள் சண்டை இருக்கும். மருமகள் என்ன தவறு செய்வாள் அதை எப்படி பெருசாக்குவது என்று மாமியார் பார்த்து கொண்டிருப்பார்கள்.
அதுபோல மனைவியும் மாமியாரின் குறைகளை கணவரிடம் கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த ஒரு காரணத்தினால் தான் பிரச்சினை அதிகரிக்கிறது.
அந்த வகையில் மாமியார் - மருமகள் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மாமியாரை உங்கள் வசப்படுத்த டிப்ஸ்
1. முடிந்தவரை மாமியாரை பாராட்டி பேசுங்கள். இது உங்களுக்கு வரும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும். உணவு சமைக்கும் போது அவருக்கு உதவி செய்தல், தனியாக எதாவது வேலை செய்தால் அவர்களை பாராட்டுதல் இப்படியான செயற்பாடுகள் மாமியாரை அன்பாக வைத்து கொள்ள உதவும்.
2. உங்கள் மாமியார் முன் கணவருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் கணவர் பற்றி மாமியாரிடம் புகார் செய்வது முற்றிலும் குறைக்க வேண்டும். இது அவருக்கு மனக் கஷ்டங்களை ஏற்படுத்தும். மகனை மரியாதையுடன் நடத்தும் போது மாமியாருக்கு மருமகள் மீது பது மரியாதை வரும்.
3. முடிந்தவரை மாமியார் பேசும் போது மரியாதையாக கேளுங்கள். சில வேளைகளில் அவர்கள் கூறுவது சரியானதாக இருக்கலாம். இடையில் மறுத்து பேசும் போது அவர்கள் உங்களை தவறாக நினைக்கலாம். கணவரின் தாய் உங்களை விட மூத்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். மதித்து நடந்து கொண்டால் வருகின்ற பிரச்சினைகள் முற்றாக குறையும்.
4. எவ்வளவு வேலை இருந்தாலும் மாமியாருடன் கொஞ்சம் அமர்ந்து பேசுங்கள். உங்களுக்குள் இருக்கும் விடயங்களை பொறுமையுடன் பரிமாறிக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் நல்லதொரு உறவை ஏற்படுத்தும். சில மாமியாரை அறுவருப்பாக நினைப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம்.
5. வீட்டில் ஏதாவது மாற்றம் செய்யும் முன்னர் மாமியார் - மாமனாரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இது உங்கள் மீது தனி மரியாதை மற்றும் மதிப்பை உண்டு பண்ணும். உங்களுக்கு முன் அந்த குடும்பத்தை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான் என்பதனை மறந்து விடக் கூடாது.
6. பெண்கள் பொதுவாக அவர்களின் வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். அதே போல் மாமியார் வீட்டிலும் சோம்பேறியாக இருக்க முயற்சிப்பார்கள். இது உங்களுக்கு ஒரு அவப் பெயரை எடுத்து கொடுக்கும். நீங்கள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதை தான் மாமியாரும் விரும்புவார்கள். இப்படி மாமியாருக்கு பிடித்த விடயங்களை செய்யும் போது அவர்களும் உங்கள் மீது அன்பு வைத்திருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |