கிச்சன் பொருட்களில் அதிகமான எண்ணெய் பசை உள்ளதா? எளிய டிப்ஸ் இதோ
கிச்சன் பொருட்களில் உள்ள எண்ணெய் பிசுக்கை எளிதாக போக்கும் சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சில நேரங்களில் சமையலறையில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்கள் மிகவும் அழுக்காகிவிடும். அவற்றில் படிந்திருக்கும் எண்ணெய் பசையை அகற்றுவது மிகவும் கடினமாக வேலையாகவே இருக்கும்.
குறிப்பாக எண்ணெய் பாத்திரங்கள், கேன்கள் இவற்றில் தான் கறைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக், பீங்காள், சில்வர் பொருட்களில் உள்ள எண்ணெய் பசைகளை எந்த ரசாயனமும் இல்லாமல் சுத்தம் செய்யும் சில வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

வழிமுறைகள் என்ன?
பிளாஸ்டிக் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு பஞ்சு உருண்டையில் மண்ணெண்ணெய் எடுத்து பாத்திரத்தில் அழுக்கு உள்ள இடத்தில் சிறிது நேரம் தேய்த்தால் அழுக்கு வெளியேறும் அல்லது ஒருநாள் அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அவை சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறினை பிழிந்து பிளாஸ்டிக் கொள்கலனை 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்து அதை வெளியே எடுத்து சாதாரணமாக கழுவினால் முற்றிலும் சுத்தமாக இருக்கும். சிலர் லேசான சோப்புடன் வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையையும் பயன்படுகின்றனர்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு சோப்பு சேர்த்து கலந்து அதில் பிளாஸ்டிக் கொள்கலன்களை நனைத்து சிறிது நேரம் கழித்து பாத்திரங்களை வெளியே எடுத்து ஈரமான துணியால் துடைத்தால் எண்ணெய் பசை இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
சிறிது வெதுவெதுப்பான நீரில் வினிகரை கலந்து அந்த தண்ணீரை ஒரு துணியைப் பயன்படுத்தி அனைத்து கொள்கலன்களிலும் தடவ வேண்டும். பின்பு ஸ்க்ரப்பரில் லேசான சோப்பு தடவி கொள்கலன்களை சுத்தம் செய்யலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |