குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட ரெடின் கிங்ஸ்லி... குழந்தை எப்படி வளர்ந்திட்டாங்கனு பாருங்க
நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி மற்றும் குழந்தையுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நட்சத்திர தம்பதி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கொமடி நடிகராக இருப்பவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நிலையில், தொடர்ந்து தனது யதார்த்தமான நடிப்பினால் பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், பின்பு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் சென்னைக்கு வந்துள்ளார்.
46 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்த இவர் சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டு பெரும் பேச்சுப்பொருளாகவே இருந்தது.

குடும்பத்துடன் கிங்ஸ்லி
அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டு வரும் கிங்ஸ்லி பொங்கல் கொண்டாடிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆம் இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள நிலையில், தற்போது சற்று வளரவும் செய்துள்ளது. அதற்கு பாரம்பரிய உடையான பாவாடை, சட்டையை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இவர்களின் குடும்ப புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், லைக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |