Fridge-ல் இஞ்சி கெட்டு போகாமல் சேமிப்பது எப்படி? நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
சமையலறையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் இஞ்சியும் ஒன்று.
இது உணவுகளில் மட்டுமின்றி, சிலர் தேநீரும் போட்டு விரும்பி குடிக்கிறார்கள். அதுவும் குளிர்காலம் வந்து விட்டால் பலரும் இஞ்சியை அதிகமாக டீயில் போட்டு குடிப்பார்கள்.
சில நேரங்களில் இஞ்சி இரண்டு அல்லது மூன்று நாட்களில் கெட்டுப் போய்விடும். இதற்கான முக்கிய காரணமாக களஞ்சியப்படுத்தலில் ஏற்படும் தவறு பார்க்கப்படுகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் எப்படி மூலிகை பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில், இஞ்சி மாதக்கணக்கானாலும் எப்படி குளிரூட்டியில் வைத்து கெட்டு போகாமல் பாதுகாப்பது எப்படி என்பதனை தெரிந்து கொள்வோம்.
கெட்டுப் போகாமல் இஞ்சியை பாதுகாப்பது எப்படி?
1. இஞ்சி நீண்ட நாள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க வேண்டும் என்றால் முதல் இஞ்சி வாங்கியதும் அதனை சுத்தம் செய்து அதிலுள்ள ஈர்பதனை அகற்ற வேண்டும். இது இஞ்சியை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்.
2. புதிதாக வாங்கிய இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும் முன்னர் இஞ்சியை தோல் நீக்காமல் அப்படியே பையில் வைத்து பயன்படுத்த வேண்டும். இப்படி செய்து இஞ்சி புதிது போல் அப்படியே இருக்கும்.
3. தோல் உரித்த இஞ்சியை பேக்கிங் தாளில் வைத்து சிறிது நேரம் அப்படியே உறைய வைக்க வேண்டும். பிறகு அந்த இஞ்சியை காற்று பூக்காத ஒரு டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் இஞ்சியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
4. இஞ்சியை கவரில் சேமிக்க விரும்பினால் முதலில் இஞ்சியை நன்றாக கழுவி விட்டு ஈரம் இல்லாத படி நன்கு அடைத்து வைக்க வேண்டும். அத்துடன் ஒரு சுத்தமான பருத்தி துணியால் துடைத்து ஒரு கவரில் போட்டு வைக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |