அன்னபூரணி அம்மாவுக்கு போட்டியாக TikTok அம்மன்
சமீபநாட்களாகவே போலி சாமியார்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என கொந்தளிக்கின்றனர் மக்கள்.
தற்போது புதிதாக அன்னபூரணி அரசு அம்மாவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார் டிக்டாக் மூலம் பிரபலமான சாதனம்மா.
டிக்டாக் தன்னுடைய நடனத்தால் பிரபலமடைந்தார் திருச்சி சாதனா, தொடர்ந்து யாரையாவது திட்டி வீடியோ, குத்தாட்டம் என பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அன்னபூரணி அரசு அம்மாவை கலாய்க்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சாதனா அம்மாவாக அவதாரம் எடுத்திருக்கிறார், அவரை சுற்றி இருப்பவர்கள் தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர்.
உடனே சாதனா பக்தர்கள் மீது வெற்றிலையை பிய்த்து வீசி ஆசீர்வாதம் வழங்குகிறார், அங்கிருக்கும் பக்தர்களும் அம்மா தாயே என்று கரகோஷம் செய்து மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்.
இந்த வீடியோ வைரலாக, யாரையும் பார்த்து இதை செய்யவில்லை என்றும், தன் மனதில் தோன்றியதை செய்ததாகவும் சாதனா விளக்கம் அளித்துள்ளார்.
இருந்தாலும் இப்படி போலி சாமியார்கள் உருவாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.