ஒரே ஒரு பதிவிற்கு கோடிகளை அள்ளும் டிக்டாக் பிரபலம்! வசிக்கும் வீடு மட்டுமே மில்லியன் பெறுமதி
உலகின் நம்பர் 1 Tik Tok பிரபலமான Khaby Lame ஒரே ஒரு பதிவிற்கு பெரும் பணம் என்பது உலகின் முன்னணி நிறுவனங்களின் CEOகளின் வருட சம்பளத்தை விட அதிகம் என்ற தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா சமயத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நின்ற Khaby Lame என்பவருக்கு டிக் டாக் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளது.
அதில் மக்கள் தினசரி செய்யும் வேலைகளை எப்படி சுலபமாக செய்வது என்பது போன்ற டிக் டாக் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதனால் இவரை பின்பற்றும் மக்கள் எண்ணிக்கை அதிகம் ஆனது.
இவருக்கு பல நிறுவனங்கள் மூலமாக அவர்களின் நிறுவன விளம்பரங்களை அவரின் வழியில் விளம்பரம் செய்ய ஸ்பான்சர் கிடைத்துள்ளது.
இந்த வருட சம்பளம் 80 கோடி
இவ்வாறு அவர் இந்த வருடம் மட்டும் இதுவரை 80 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
இவர் தங்கியிருக்கும் வீடு தற்போது 6 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.
மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இவருடைய வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்பது இவருக்கே தெரியாது.
