தைராய்டு பிரச்சினையுள்ளவர்கள் ஒரு கப் கொத்தமல்லி தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
மனிதர்களின் வாழ்க்கை முறை நாளுக்கு நாள் மாறி கொண்டே வருகின்றது. இதனால் மனிதர்கள் அதிகமாக ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.
ஒரு கருத்து கணிப்பின் படி, மூன்று பேரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இதனால் தவறான வாழ்க்கை முறையால் வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட நோய்களை அவ்வளவு எளிதில் குணமாக்க முடியாது. மாறாக தொடர்ந்து சிகிச்சை பெறுவதுடன் வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை கொண்டு மருத்துவ குறிப்புக்களையும் பின்பற்றலாம். இதனால் நோயினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறையும்.
அந்த வகையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு பிரச்சினையுள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகம் எடுத்து கொள்ளலாம்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் காணலாம்.
இது தொடர்பான ஆய்வில்,
1. கொத்தமல்லி விதைகளை எடுத்து படுக்கைக்கு செல்லும் முன்னர் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனை கோடைக்காலங்களில் அடிக்கடி குடித்து வந்தால் பல நோய்கள் குணமாகும் என கூறப்படுகிறது.
2. கோடைக்காலங்கள் மேற்குறிப்பிட்டவாறு குடிக்கலாம். அதே சமயம் குளிர்காலங்களில் அந்த தண்ணீரை கொஞ்சம் வெப்பமேற்றி குடிக்க வேண்டும். இதனால் செரிமான அமைப்பு பலப்படும்.
3. ரத்த அழுத்தம், சர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த தண்ணீரை குடித்து வந்தால் நோய் குணமாக வாய்ப்பு இருக்கிறது.
4. கொத்தமல்லியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இது சளி மற்றும் அது சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது.
5. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு குளிர்காலத்தில் வரும் நோய் தொற்று, சளி பிரச்சினைகள், சைனஸ் மற்றும் அலர்ஜி வரவே வராது.
6. சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை மேம்படுத்தும் வேலையை கொத்தமல்லி விதைகள் பார்க்கின்றன. இதனால் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
7. செரிமான அமைப்பிற்கு ஆரோக்கியம் வழங்குவதால் வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபெறலாம்.
8. கொத்தமல்லி விதைகள் தைராய்டு போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |