தீராத சளித்தொல்லையால் அவஸ்தையா? தூதுவளை துவையல் செய்து சாப்பிடுங்க
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்றாகும்.
இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.
இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
குறிப்பாக ஈழை நோய்க்கு (ஆஸ்துமா) இது மருந்தாகப்பயன்படுகிறது.
இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
இந்த பதிவில் துவையல் செய்து சாப்பிடுவது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 துண்டு
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்
புளி - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கிக் கொள்ளவும்.
இதன்பின்னர் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆறவைத்து கெட்டியாக அரைத்துக் கொண்டால் சுவையான துவையல் தயார்.